Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நீர் நிலைகளில் வெளியேற்றப்படும் பாதாள சாக்கடை கழிவு நீர் அதிகாரிகள் அலட்சியத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு

நீர் நிலைகளில் வெளியேற்றப்படும் பாதாள சாக்கடை கழிவு நீர் அதிகாரிகள் அலட்சியத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு

நீர் நிலைகளில் வெளியேற்றப்படும் பாதாள சாக்கடை கழிவு நீர் அதிகாரிகள் அலட்சியத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு

நீர் நிலைகளில் வெளியேற்றப்படும் பாதாள சாக்கடை கழிவு நீர் அதிகாரிகள் அலட்சியத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு

ADDED : ஜன 10, 2024 10:17 PM


Google News
Latest Tamil News
உடுமலை : உடுமலையில், நகராட்சி பாதாளச்சாக்கடை கழிவுகள் நேரடியாக, ஓடையில் கலந்து நீர் நிலை மாசடைந்து வருகிறது.

உடுமலை பகுதிகளில் பசுமைக்கு ஆதாரமாக உள்ள, ஏழு குளங்கள் மற்றும் நகர பகுதி மற்றும் மேற்கு கிராமங்களில் பெய்யும் மழை வெள்ள நீர், உப்பாறு ஓடைக்கு செல்லும் நீர் வழித்தடமாக தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம், ராஜவாய்க்கால் ஓடை உள்ளிட்ட இயற்கையான மழை நீர் ஓடைகள் அமைந்துள்ளன.

இதில், நகரின் குடியிருப்புகளுக்கு மத்தியில் தங்கம்மாள் ஓடை பயணிக்கிறது. ஒரு காலத்தில் அகலமாகவும், நன்னீர் ஓடிய ஓடையாகவும் இருந்தது.

நகர வளர்ச்சி காரணமாக ஆக்கிரமிப்புகளால் குறுகியும், வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுகள், குப்பையால் புதர் மண்டியும், நன்னீர் ஓடை மாயமாகி வருகிறது.

இந்நிலையில், நகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் பாதாளச்சாக்கடை திட்டத்தின் பிரதான குழாய், தங்கம்மாள் ஓடை வழியாக செல்கிறது.

நகர பகுதியில் சேகரிக்கப்படும், பாதாள சாக்கடை நீர், ஏரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள, சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரித்து, அதற்கு பின் ஓடையில் வெளியேற்றப்படுகிறது.

பாதாளச்சாக்கடை திட்ட வடிவமைப்பு குளறுபடி, திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, திட்டம் பல இடங்களில் சிதிலமடைந்து வருகிறது.

குழாய் உடைந்தும், ஆளிறங்கும் குழி எனப்படும் மேனுவல் மூடிகள், கட்டமைப்புகள் உடைந்தும், துர்நாற்றம், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால், சுத்திகரிப்பு மையத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு மேற்கொள்ளாமலும், திட்ட குழாய் மற்றும் மேனுவல் வாயிலாக, நேரடியாக நீர் நிலைகளில், பாதாள சாக்கடை கழிவு நீர் கலக்கப்பட்டு வருகிறது.

தங்கம்மாள் ஓடையில், பிரதான ரோட்டிலேயே, பல இடங்களில் திட்ட குழாய் மற்றும் மேனுவல் ஆகியவை பல இடங்களில் உடைந்தும், செயற்கையாக உடைக்கப்பட்டும், நேரடியாக ஓடையில் கழிவுகள் கலக்கப்படுகிறது.

அதிகாரிகள் அலட்சியத்தால், நீர் நிலைகள், மனித கழிவுகளுடன் கூடிய பாதாள சாக்கடை கழிவு வெளியேற்றும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இதனால், துர்நாற்றம், கொசு உற்பத்தி, நோய் தொற்று பரவுதல் என பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.

மேலும், ஓடைகள் வழியாக செல்லும் பாதாள சாக்கடை கழிவு நீர், உப்பாறு ஓடையில் கலந்து, உப்பாறு அணை, அமராவதி ஆறு மற்றும் வழியோர குளம், குட்டைகள் என பல கி.மீ., துாரத்திற்கு அமைந்துள்ள நீர் நிலைகள் மாசு படுத்தப்பட்டு வருகிறது.

பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களும், நிலத்தடி நீரும் பாதித்து வருகிறது. நகரில் சேகரிக்கப்படும், பாதாள சாக்கடை கழிவு நீர், சுத்திகரிப்பு மையத்தில் செல்லாமல், பெருமளவு கழிவு, மழை நீர் ஓடைகளில், குளங்களின் கசிவு நீர் வெளியேறும் கட்டமைப்புகள், பொது இடங்களில் வெளியேற்றப்படுவதால், சுத்திகரிப்பு மையம் செலவினம் குறைக்கப்படுகிறது.

நகர பகுதிகளில் சுகாதார கேடு ஏற்படுத்தும் வகையில், நேரடியாக ஓடையில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேற்றப்படுவதை தடுக்கவும், அபாயகரமான கழிவுகளை, குடியிருப்புகளுக்கு மத்தியில், நன்னீர் ஓடையில் கலந்து வரும் அதிகாரிகள் மீது, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us