/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பச்சை மலை முதல் பாலக்காடு வரை அழிந்துவரும் வண்ணத்துப் பூச்சிகள்! பச்சை மலை முதல் பாலக்காடு வரை அழிந்துவரும் வண்ணத்துப் பூச்சிகள்!
பச்சை மலை முதல் பாலக்காடு வரை அழிந்துவரும் வண்ணத்துப் பூச்சிகள்!
பச்சை மலை முதல் பாலக்காடு வரை அழிந்துவரும் வண்ணத்துப் பூச்சிகள்!
பச்சை மலை முதல் பாலக்காடு வரை அழிந்துவரும் வண்ணத்துப் பூச்சிகள்!
ADDED : ஜூன் 05, 2025 01:19 AM

கோவை; 'பட்டாம்பூச்சிகள்' மகரந்தச் சேர்க்கை செய்வதில் தேனீக்கு அடுத்தபடியாக முக்கிய பங்காற்றும் உயிரினங்கள். ஆனால் இப்போது அவை கவனிக்கப்படாததால், மெல்ல அழிந்து வருவதாக, புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடந்த ஆய்வின் படி, இருசக்கர வாகனங்களில் அடிபட்டு, நாளுக்கு நாள் அதிக பட்டாம்பூச்சிகள் உயிரிழந்து வருகின்றன. குறிப்பாக, காலை 9:00 முதல் 11:00 மணி வரையும், மாலை 3:30 முதல் 6.30 மணி வரையும் பட்டாம்பூச்சிகளின் உயிரிழப்பு, அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, வனவியல் ஆராய்ச்சியாளரும், சுற்றுச்சூழல் உயிரியல் பேராசிரியருமான அசோக் சக்ரவர்த்தி கூறியதாவது:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், கொல்லிமலை, புளியஞ்சோலை, ஆனைமலை, பொள்ளாச்சி - பாலக்காடு சாலை, கோயம்புத்தூர் - பாலக்காடு நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் மேற்கொண்ட ஆய்வில், ஒவ்வொரு கிலோமீட்டரிலும் சுமார், 60 முதல் 100 பட்டாம்பூச்சிகள் வரை, வாகனங்களில் மோதி அடிபட்டு, இறப்பதை காணமுடிகிறது.
பட்டாம்பூச்சிகளால் பெரும்பாலும், 15 முதல் 20 மீட்டர் உயரம் மட்டுமே பறக்க முடியும். இதனால் நெடுஞ்சாலைகளில் வேகமாகச் செல்லும் இருசக்கர வாகனங்களில் சிக்கி சேதமடையும், அவற்றின் மெலிதான சிறகுகள், மேலும் பறக்க முடியாமல் ரோட்டில் விழுந்து விடுகின்றன. பின், மெல்ல உயிரிழக்கின்றன. இந்த உயிரிழப்புகள், சூழல் அமைப்பின் இயற்கை சமநிலையை பெரிதும் பாதிக்கக்கூடியது.
உணவுச்சங்கிலி மற்றும் உணவுவலை அமைப்பில், பட்டாம்பூச்சிகள் வகிக்கும் பங்கு மிக முக்கியமானது. அவற்றின் அழிவு, மனித குலத்துக்கு ஓர் எச்சரிக்கை மணி.
இவ்வாறு, அவர் கூறினார்.