/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நடைபாதையில் பொருட்கள் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் பாதிப்புநடைபாதையில் பொருட்கள் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் பாதிப்பு
நடைபாதையில் பொருட்கள் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் பாதிப்பு
நடைபாதையில் பொருட்கள் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் பாதிப்பு
நடைபாதையில் பொருட்கள் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் பாதிப்பு

நடைபாதை எங்கே
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாப், திருப்பூர் பஸ் வெளியே வரும் இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக, டூவீலர்களையும் ஹோட்டல் போர்டுகளையும் வைத்து, மக்கள் நடக்க பாதை இல்லாமல் நடுரோட்டில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் விபத்துக்கள் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழி மூடப்படுமா
பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி, 7வது வார்டு அழகாபுரி வீதியில் வாகனங்கள் அதிகம் செல்லும் வழியில், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட குழி மூடாமல் ஒரு வாரத்துக்கு மேல் உள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருநாய்கள் கட்டுப்படுத்தப்படுமா
வால்பாறை நகரில் பல இடங்களில் தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடைபாதையில் குப்பை
கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நடைபாதையில் அதிக அளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியில் செல்லும் மாணவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, இதை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கவனித்து உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
நெரிசல் தீர்க்கணும்
உடுமலை கல்பனா ரோட்டில், வடிகால் பணி மந்த கதியில் நடந்து வருகிறது. இத்துடன் வாகனங்களும், தள்ளுவண்டிகளும் ரோட்டோரத்தில் நிறுத்தப்படுவதால், நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நகராட்சியினர் வடிகால் பணிகளை விரைந்து முடிப்பதோடு, வாகனங்களின் ஆக்கிரமிப்புகளை எடுக்க வேண்டும்.
நிழற்கூரை வேண்டும்
உடுமலை, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பயணியர் பயன்படுத்தும் வகையில் நிழற்கூரை இல்லை. வெயில் காலத்திலும், மழை நேரத்திலும் வெப்பமும், மழைச்சாரலும் அடிப்பதால், பயணியர் நிற்பதற்கு இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். முறையான நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருநாய்கள் தொல்லை
உடுமலை, ஜீவா நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரிக்கிறது. மாலை நேரங்களில் வீடுகளின் முன் கூடுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கும் அச்சப்படுகின்றனர். குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கும் முடியாமல் சிரமப்படுகின்றனர். வீட்டின் முன்பு வைக்கப்படும் கழிவுகளை இழுத்துச்சென்று சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது.
துார் வாரவேண்டும்
உடுமலை ஸ்ரீ நகர் பகுதியில், மழைநீர் வடிகால் துார்வாரப்படாததால், குப்பை, கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனால், தண்ணீர் செல்ல முடியாமல் அடைத்துக்கொள்கிறது. கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சியினர் வடிகாலை துார்வார வேண்டும்.
கழிவுநீர் தேக்கம்
உடுமலை- பழநி ரோட்டில், கழுத்தறுத்தான் பள்ளத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. அதில், அப்பகுதியின் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. எனவே, கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, ராஜேந்திரா ரோட்டில் சந்தையிலிருந்து வெளியில் வரும் வாகனங்கள் வரைமுறையில்லாமல் வேகமாக வருவதால், பஸ் ஸ்டாண்டு பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். சரக்கு வாகனங்கள் ரோட்டில் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
'குடி' மகன்கள் தொல்லை
உடுமலை, சர்தார் வீதி பிரதான ரோட்டில் உள்ள மதுக்கடையினால், 'குடி'மகன்கள் தொல்லை அதிகரிக்கிறது. மது அருந்திவிட்டு பலரும் ரோட்டில் அரைகுறையான ஆடைகளுடன் விழுந்து கிடக்கின்றனர். இதனால் பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். மேலும் அருகிலுள்ள பூங்காவை திறந்த வெளிக்கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றணும்
உடுமலை, வ.உ.சி., வீதி நடைபாதையில், வணிக வளாகங்கள் ஆக்கிரமித்து பொருட்களை அடுக்கி வைத்துள்ளதால், அவ்வழியாக வாகனங்கள் செல்லும்போது பொதுமக்கள் ரோட்டில் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். எனவே, நகராட்சியினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
புதரில் பெயர் பலகை
கிணத்துக்கடவு, கோதவாடி ரோட்டில், பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை அருகே வைக்கப்பட்ட ஊர் பெயர் பலகை புதரில் உள்ளது. இதனால் புதிதாக வாகனத்தில் வருபவர்களுக்கு ஊர் பெயர் தெரியாமல் சிரமப்பட வாய்ப்புள்ளது. எனவே, இங்குள்ள புதரை அகற்ற வேண்டும்.