/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/எஸ்டேட் ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தல் எஸ்டேட் ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தல்
எஸ்டேட் ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தல்
எஸ்டேட் ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தல்
எஸ்டேட் ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 12, 2024 10:43 PM
வால்பாறை;வால்பாறையில், எஸ்டேட் ரோடுகளை சீரமைக்க வேண்டும் என, தையல் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
வால்பாறை தாலுகா தையல் கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம், சங்க தலைவர் ஈஸ்டர்ராஜா தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு, செயலாளர் கார்த்திக், பொருளாளர் ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் சந்திரசேகர் வரவேற்றார்.
கூட்டத்தில், சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் அதிக அளவில் சேர்க்க வேண்டும். தையல்கலைஞர்கள் அனைவரும் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர வேண்டும்.
சங்கத்தின் சார்பில் வால்பாறை நகரில் இலவச கண்சிகிச்சை முகாம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், எஸ்டேட் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளை நகராட்சி சார்பில் சீரமைக்க வேண்டும். வால்பாறையை சுற்றியுள்ள அனைத்து எஸ்டேட் பகுதியிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.