Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பழுதானது எலக்ட்ரிக் பைக்; ரூ.1 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

பழுதானது எலக்ட்ரிக் பைக்; ரூ.1 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

பழுதானது எலக்ட்ரிக் பைக்; ரூ.1 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

பழுதானது எலக்ட்ரிக் பைக்; ரூ.1 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

ADDED : செப் 02, 2025 09:24 PM


Google News
கோவை; கோவை, வீரகேரளம், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். 'இன்பினிட்டி எல்' என்ற நிறுவனம் தயாரித்த, எலக்ட்ரிக் பைக்கை, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஷோரூமில், 2023, ஜன.18ல் வாங்கினார். இதற்கான தொகை, 90,549 ரூபாய் செலுத்தினார்.

பதிவு எண் பெற்று வாகனம் டெலிவரி செய்யப்பட்டது. மூன்றாண்டு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. பைக்கில் எந்த பழுது ஏற்பட்டாலும், உடனடியாக சர்வீஸ் செய்து தரப்படும் என்றும், உதிரி பாகங்கள் எளிதில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மின்சார பைக்கை ஓட்டிய சில மாதங்களில் பழுது ஏற்பட்டது. சர்வீஸ் சென்டர் இல்லாததால், பழுது நீக்கி தருவதில் தாமதம் ஏற்பட்டது. மின்சார வாகனத்தின் உதிரிபாகம் மற்றும் மோட்டார் சர்வீஸ் செய்து தரப்படாததால், வாகனத்தை இயக்க முடியாமல் போனது.

இழப்பீடு வழங்கக்கோரி, கோவை கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் உறுப்பினர் சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்துள்ளதால், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய், வழக்கு செலவு, 20,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us