Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 80 - 100 வயது வாக்காளர்களை நேரில் சந்திக்க கோவை கலெக்டர் உத்தரவு தயாராகி வருகின்றனர் தேர்தல் பிரிவினர்

80 - 100 வயது வாக்காளர்களை நேரில் சந்திக்க கோவை கலெக்டர் உத்தரவு தயாராகி வருகின்றனர் தேர்தல் பிரிவினர்

80 - 100 வயது வாக்காளர்களை நேரில் சந்திக்க கோவை கலெக்டர் உத்தரவு தயாராகி வருகின்றனர் தேர்தல் பிரிவினர்

80 - 100 வயது வாக்காளர்களை நேரில் சந்திக்க கோவை கலெக்டர் உத்தரவு தயாராகி வருகின்றனர் தேர்தல் பிரிவினர்

ADDED : செப் 10, 2025 10:41 PM


Google News
Latest Tamil News
கோவை: கோவை மாவட்டத்தில் வசிக்கும் 80, 90 மற்றும் 100 வயதை கடந்த வாக்காளர்களின் விவரங்களை, அவர்களது வீட்டுக்கு நேரில் சென்று உறுதிப் படுத்தி, அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில் 31.22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போது புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. கல்லுாரிகளில் சிறப்பு முகாம் நடத்தி, 17 வயதாகும் இளம் வாக்காளர்களும், பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர்.

பட்டியலில் பெயர் சேர்க்க, இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் அவர்களது சொந்த மாவட்டத்தில் உள்ள முகவரியை வைத்து, வாக்காளராக பதிவு செய்து ஓட்டுரிமை பெறலாம்.

அவர்கள் வசிக்கும் மாவட்டம், சட்டசபை தொகுதி, தாலுகா போன்ற விவரங்கள் தெரிந்தால் போதும். உடனுக்குடன் அவர்களது பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் .

தற்போதைய வாக்காளர் பட்டியலின்படி, கோவை மாவட்டத்தில், 600 வாக்காளர்கள், 100 வயதை கடந்துள்ளனர். இவர்களது முகவரிக்கு நேரில் சென்று, உண்மை நிலையை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க, தேர்தல் பிரிவினருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், 100 வயதை கடந்த வாக்காளர்கள் எத்தனை பேர் உள்ளனர், முகவரி, தொகுதி ஆகியவை சரியாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யவும், அவர்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனரா என்பது குறித்து, ஆய்வறிக்கையில் குறிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல், 80 மற்றும் 90 வயது கடந்த வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

100 சதவீத தவறில்லாத

பட்டியல் தயாரிக்க முயற்சி

மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பூர்வாங்க பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 100 சதவீத தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க முயற்சிக்கிறோம். 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைக்க ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சில இடங்களில் ஓட்டுச்சாவடி கட்டடம் மாறுகிறது. கூடுதலாக ஓட்டுச்சாவடி அமைப்பது தொடர்பாக, விரைவில் அரசியல் கட்சியினருடன் ஆலோசிக்கப்படும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us