ADDED : மே 24, 2025 11:43 PM
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சரவணம்பட்டியில் இருந்து, 61 வயதுடைய மூதாட்டி, குடும்பத்தாருடன் வந்து, சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வசந்த மண்டபத்தில் உள்ள நெய்தீப மேடை அருகே வரும்போது, பலத்த காற்று வீசியது.
நெய் தீப மேடையின் மேல் வைக்கப்பட்டிருந்த தகர ஷீட் சரிந்து விழுந்ததில், மூதாட்டிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தனியார் ஆம்புலன்சில், சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.