ADDED : ஜூன் 17, 2025 09:32 PM
மேட்டுப்பாளையம், ; கோவை மாவட்டம் சிறுமுகை அருகே இடுகம்பாளையம் வெள்ளிக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 60. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தோட்டத்தில் இருந்த கிணற்றில் கால் தவறி விழுந்தார்.
அவரை பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் காப்பாற்ற முயன்றும் நீரில் மூழ்கி இறந்து விட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் ரமேஷ் உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.----