/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பத்தாம் வகுப்பு தேர்வில் கல்வி மாவட்டம்... 95.51% தேர்ச்சி! கடந்தாண்டை விட, 3.51 சதவீதம் அதிகரிப்பு பத்தாம் வகுப்பு தேர்வில் கல்வி மாவட்டம்... 95.51% தேர்ச்சி! கடந்தாண்டை விட, 3.51 சதவீதம் அதிகரிப்பு
பத்தாம் வகுப்பு தேர்வில் கல்வி மாவட்டம்... 95.51% தேர்ச்சி! கடந்தாண்டை விட, 3.51 சதவீதம் அதிகரிப்பு
பத்தாம் வகுப்பு தேர்வில் கல்வி மாவட்டம்... 95.51% தேர்ச்சி! கடந்தாண்டை விட, 3.51 சதவீதம் அதிகரிப்பு
பத்தாம் வகுப்பு தேர்வில் கல்வி மாவட்டம்... 95.51% தேர்ச்சி! கடந்தாண்டை விட, 3.51 சதவீதம் அதிகரிப்பு

உதவி பெறும் பள்ளிகள்
கல்வி மாவட்டத்தில் மொத்தம், 10 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. அதில், 373 மாணவர்கள், 614 மாணவியர் என மொத்தம், 987 பேர் தேர்வெழுதினர். அதில், மாணவர்கள், 335, மாணவியர், 607 பேர் என, மொத்தம், 942 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 89; மாணவியர், 98 சதவீதம் என மொத்தம், 95.44 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நகராட்சி பள்ளிகள்
பொள்ளாச்சி நகராட்சியில், மூன்று பள்ளிகளில், மாணவர்கள், 147, மாணவியர், 112 பேர் தேர்வெழுதினர். அதில், 125 மாணவர்கள், 101 மாணவியர் என, 226 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 85 சதவீதமும், மாணவியர், 90 சதவீதம் என மொத்தம், 87.26 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மெட்ரிக் பள்ளிகள்
62 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. அதில், 1,781 மாணவர்கள், 1,552 மாணவியர், என, மொத்தம், 3,333 பேர் தேர்வெழுதினர். அதில், 1,754 மாணவர்கள், 1,544 மாணவியர் என, மொத்தம், 3,298 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 98 சதவீதம், மாணவியர், 99 என, மொத்தம், 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கல்வி மாவட்டம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத மாணவர்கள், 4,306, மாணவியர், 4,443 என மொத்தம், 8,749 பேர் விண்ணப்பித்தனர். அதில், மாணவர்கள், 4,040, மாணவியர், 4,316 என மொத்தம், 8,356 பேர் தேர்வெழுதினர். மாணவர்கள், 266, மாணவியர், 127 என மொத்தம், 353 பேர் தேர்ச்சி பெறவில்லை.
மாணவியர் அபாரம்
பத்தாம் வகுப்பு தேர்வில், வழக்கம் போல மாணவர்களை விட மாணவியர் தேர்ச்சி சதவீதமே அதிகரித்துள்ளது.