/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுற்றுச்சூழலுக்கு உகந்த பள்ளிகள்; மதிப்பீடு செய்யும் பணி துவக்கம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பள்ளிகள்; மதிப்பீடு செய்யும் பணி துவக்கம்
சுற்றுச்சூழலுக்கு உகந்த பள்ளிகள்; மதிப்பீடு செய்யும் பணி துவக்கம்
சுற்றுச்சூழலுக்கு உகந்த பள்ளிகள்; மதிப்பீடு செய்யும் பணி துவக்கம்
சுற்றுச்சூழலுக்கு உகந்த பள்ளிகள்; மதிப்பீடு செய்யும் பணி துவக்கம்
ADDED : செப் 11, 2025 10:05 PM
கோவை; பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை சார்பில், பசுமை பள்ளி மதிப்பீடு திட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும், தனியார், பழங்குடியினர், சிறுபான்மையினர், மற்றும் மத்திய அரசு பள்ளிகள் கட்டாயமாக பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், செப்., 30க்குள் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தற்போது அரசு பள்ளிகளை ஈடுபடுத்த, மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கல்வித்துறையினர் கூறுகையில், 'மாணவர்களிடம் சுகாதாரம், சுத்தம் மற்றும் நீர், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உருவாக்குவதன் மூலம், அவர்களுக்கு தேவையான அடிப்படை செயல்பாடுகள் மற்றும் சமூக மதிப்புகளை வளர்க்கும் வாய்ப்பை பசுமை பள்ளி மதிப்பீடு வழங்குகிறது.
இம்மதிப்பீட்டில், பள்ளி வளாகத்தில் உள்ள தண்ணீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு, மாணவர்கள் சோப்புடன் கை கழுவுதல், பள்ளி நிர்வாகம் மற்றும் பராமரிப்பு, மாணவர்களின் நடத்தை மாற்றம், திறன் மேம்பாடு, மிஷன் லைப் செயல்பாடுகள் போன்றவை கணக்கில் கொள்ளப்பட உள்ளன' என்றனர்.
பள்ளிகள் பங்கேற்க, shvr.education.gov.in என்ற தனி இணையதளம், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கான மொபைல் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி, சுயமதிப்பீட்டை மேற்கொண்டு, தங்கள் பதிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.