/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குளங்களை துார்வார விவசாயிகள் சங்கம் கோரிக்கை குளங்களை துார்வார விவசாயிகள் சங்கம் கோரிக்கை
குளங்களை துார்வார விவசாயிகள் சங்கம் கோரிக்கை
குளங்களை துார்வார விவசாயிகள் சங்கம் கோரிக்கை
குளங்களை துார்வார விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ADDED : ஜூன் 29, 2025 11:41 PM

சூலுார்; சூலுாரில் உள்ள பெரிய குளம், சின்ன குளத்தை தூர்வார வேண்டும், என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் ஏர்முனை இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் சூலுார் அடுத்த செங்கத்துறையில் நடந்தது. மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். நகர தலைவர் முத்துசாமி, செயலாளர் ரவிக்குமார், ஏர்முனை மாநில துணை தலைவர் சுரேஷ்,ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சூலுார் சின்னக் குளம் மற்றும் பெரிய குளத்தை தூர் வார வேண்டும். தென்னை மரங்களை தாக்கும் நோய்களுக்கு, வேளாண் துறை தீர்வு காண வேண்டும். நொய்யலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜூலை 5 ம்தேதி சூலுாரில் நடக்கும் உழவர் பேரணியில் அனைவரும் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.