/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 27, 2025 11:07 PM

கோவை; பெரியநாயக்கன்பாளையம், யுனைடெட் கலை அறிவியல் கல்லுாரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் கடத்துதலுக்கு எதிரான இந்தப் பேரணி, கூடலுார், கவுண்டம்பாளையத்திலிருந்து நாயக்கன்பாளையம் வரை நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை அதிகாரி ஸ்ரீ ராஜேஷ் கண்ணன் பேரணியை துவக்கி வைத்தார்.
இதில், 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்தினர்.யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வர் விஜயா மற்றும் பேராசிரியர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.