Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆதார விலையில் கொள்முதல் செய்த கொப்பரையை... விற்பனை செய்யாதீங்க!கடும் நெருக்கடிக்கு ஆளாகும் தென்னை விவசாயிகள்

ஆதார விலையில் கொள்முதல் செய்த கொப்பரையை... விற்பனை செய்யாதீங்க!கடும் நெருக்கடிக்கு ஆளாகும் தென்னை விவசாயிகள்

ஆதார விலையில் கொள்முதல் செய்த கொப்பரையை... விற்பனை செய்யாதீங்க!கடும் நெருக்கடிக்கு ஆளாகும் தென்னை விவசாயிகள்

ஆதார விலையில் கொள்முதல் செய்த கொப்பரையை... விற்பனை செய்யாதீங்க!கடும் நெருக்கடிக்கு ஆளாகும் தென்னை விவசாயிகள்

ADDED : ஜூலை 20, 2024 12:20 AM


Google News
பொள்ளாச்சி;தேங்காய், கொப்பரைக்கு விலை இல்லாத சூழலில், கடந்தாண்டு கொள்முதல் செய்த கொப்பரையை 'நாபிட்' நிறுவனம் விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, விவசாயிகளுக்கு இடி விழுந்தது போன்று உள்ளதாகவும், சீசன் இல்லாத நேரத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், சாகுபடி செய்யப்படும் தேங்காய், கொப்பரை போன்றவை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். விலை இல்லாதது, வறட்சி, நோய் தாக்குதல் போன்ற காரணங்களினால் தென்னை விவசாயிகள் மீளாத்துயரில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த, மூன்று மாதங்களாக ஆதார விலை திட்டத்தில் கொப்பரை கொள்முதல் செய்த அரசு, கொப்பரையை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், தற்போது கொப்பரையை விற்பனை செய்தால் மேலும், விவசாயிகளுக்கு தான் பாதிப்பு ஏற்படும். சீசன் இல்லாத நேரத்தில் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகி தங்கவேலு கூறியதாவது: தென்னை பரப்பளவு அதிகம் உள்ளதால், சீசனில், 45 நாட்களுக்கு ஒரு முறை என மூன்று முறை, ஆதார விலை திட்டத்தில் கொள்முதல் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும்.

ஆனால், கொப்பரை கொள்முதல் செய்வதில், வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகளவு உள்ளதால், விவசாயிகளுக்கு முழு பலன் போய் சேரவில்லை. நேரடியாக கொள்முதலுக்கு சிறு விவசாயிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால், விவசாயிகள் பெயரில் கொப்பரை கொள்முதல் செய்ய, விவசாயிகளுக்கு, கிலோவுக்கு, 10 ரூபாய் வழங்கி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளுக்கும் கமிஷன் கொடுக்கப்படுகிறது. தரம் குறைவாகவும், ஈரப்பதம் அதிகமாக உள்ள கொப்பரையையும் கொள்முதல் செய்துள்ளதாக தெரிகிறது.

கடந்த, மூன்று மாதங்களாக அரசு கொள்முதல் செய்த போதும், ஒரு முறை கூட கொள்முதலுக்கு கொண்டு செல்லாத விவசாயிகள் அதிகளவு உள்ளனர்.

இந்நிலையில், கடந்தாண்டு கொள்முதல் செய்த கொப்பரையை, 'நாபிட்' நிறுவனம் தற்போது விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கடந்த, 16ம் தேதி வெளியிட்ட விற்பனை விலை ரத்தாகியுள்ளது.

அரசு உரிய கவனம் செலுத்தி சீசன் இல்லாத, ஜன., - மார்ச் மாதங்களில் விற்பனை செய்யலாம். இதனால், விவசாயிகள், வியாபாரிகள், அரசுக்கும் நஷ்டம் ஏற்படாது. எனவே, அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

விவசாயிகள், அரசுக்கு நஷ்டம் ஏற்படும்!

தற்போது, கொப்பரையை, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆயில் மில் புரோக்கர்கள், தமிழக வியாபாரிகள் இணைந்து குறைந்த விலை குறிப்பிட்டு கொப்பரையை வாங்க முயற்சிக்கின்றனர்.அரசு, 111.60 ரூபாய்க்கு கொள்முதல் செய்த கொப்பரையை, குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும்.கொப்பரை விலை சரியும் சூழல் உள்ளதால், விவசாயிகள் மேலும் பாதிக்கப்படுவர்.ஏற்கனவே, நோய் பாதிப்பு, விலை இல்லாதது போன்ற காரணங்களினால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.தற்போது, அரசு கொள்முதல் செய்த கொப்பரையை விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு பேரிடியாக இருக்கும், என, கொப்பரை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us