/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உங்கள் குழந்தை இரவில் படுக்கையில் 'உச்சா' போகுதா? உங்கள் குழந்தை இரவில் படுக்கையில் 'உச்சா' போகுதா?
உங்கள் குழந்தை இரவில் படுக்கையில் 'உச்சா' போகுதா?
உங்கள் குழந்தை இரவில் படுக்கையில் 'உச்சா' போகுதா?
உங்கள் குழந்தை இரவில் படுக்கையில் 'உச்சா' போகுதா?
ADDED : ஜூலை 04, 2025 10:28 PM

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், இரவு நேரங்களில் தன்னை அறியாமல் படுக்கையில் சிறுநீர் கழிப்பது இயல்பான ஒன்று. ஆனால், ஐந்து அல்லது 10 வயதுக்கு மேலும் அதை தொடர்ந்தால்?
மருத்துவ சிகிச்சை அவசியம் என்கிறார், தேசிய குழந்தைகள் நலக்குழும தமிழக பிரிவு தலைவர் டாக்டர் ராஜேந்திரன்.
அவர் கூறியதாவது:
ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தை, குறைந்தது மாதம் இரண்டு முறை கட்டுப்பாடில்லாமல் உறங்கும் போது சிறுநீர் கழிப்பதை, 'நாக்டர்னல் எனுரிசிஸ்' என்கிறோம். இது குழந்தை வளர்ச்சியின் ஒரு கட்டமாகும். ஆனால், தொடர்ந்து நீடித்தால், பரிசோதனை, சிகிச்சை அவசியம்.
மருத்துவ குறைபாடு
சிறுநீர் பாதையை கட்டுப்படுத்தும் நரம்புகள், முழுமையாக வளராமல் இருப்பதாலும், சிறுநீரகம் வேலைத்திறன் குறைவாக வேலை செய்து, இரவில் அதிகமாக சிறுநீர் உருவாகலாம். தவிர, ஹார்மோன் குறைபாடு, மரபியல் பிரச்னை, குடும்பத்தில் தகராறு, பள்ளி அழுத்தம், தம்பி மற்றும் தங்கை பிறப்பால் ஏக்கம் போன்றவற்றால் ஏற்படும் உளவியல் பாதிப்பு, மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் பையில் தொற்று காரணத்தாலும் இப்பாதிப்பு இருக்கும்.
பாதிப்பு உள்ள குழந்தைகளை பெற்றோர் திட்டுவது, அடிப்பது கூடாது. பத்து வயதுக்கு மேல், இப்பாதிப்பால் வெட்கம், உளவியல் பாதிப்பு ஏற்படும். நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில், கேலி, கிண்டல் செய்யக் கூடாது.
இரவு நேரங்களில் அதிக தண்ணீர், பானங்கள் குடிக்காமல் இருக்கவும், உறகத்திற்கு முன், உறங்கிய சிறிது நேரத்திற்கு பின், சிறுநீர் கழிக்க பழக்கப்படுத்த வேண்டும். இதற்கு மருத்துவர்களை அணுகி, உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால், தீர்வு சாத்தியமானது.
இவ்வாறு, அவர் கூறினார்.
பாதிப்பு உள்ள குழந்தைகளை பெற்றோர் திட்டுவது, அடிப்பது கூடாது. பத்து வயதுக்கு மேல், இப்பாதிப்பால் வெட்கம், உளவியல் பாதிப்பு ஏற்படும். நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில், கேலி, கிண்டல் செய்யக் கூடாது.