/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நல்ல திட்டங்களை சிதைக்கிறது தி.மு.க. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு நல்ல திட்டங்களை சிதைக்கிறது தி.மு.க. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு
நல்ல திட்டங்களை சிதைக்கிறது தி.மு.க. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு
நல்ல திட்டங்களை சிதைக்கிறது தி.மு.க. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு
நல்ல திட்டங்களை சிதைக்கிறது தி.மு.க. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு
ADDED : செப் 14, 2025 01:49 AM

கோவை;'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற தேர்தல் பிரசார பயணத்தில், கோவையில் தொழில் அமைப்பினர், விவசாயிகள் சங்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்பினருடன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று கலந்துரையாடினார். முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலை வகித்தார்.
வர்த்தக கட்டமைப்பு இல்லை அமைப்புகளின் நிர்வாகிகள் பேசியதாவது:
தொழில் நகரான கோவையில், 1950களில் மோட்டார், பம்ப் செட் வர்த்தகம், 80 சதவீதம் இருந்தது; தற்போது, 40 சதவீதமாக குறைந்து விட்டது. குஜராத் மாநிலத்தில் மின் கட்டணம் குறைவு, மானியம் வழங்குவதால் மோட்டார், பம்ப் செட் உற்பத்தி நிறுவனங்கள், அங்கு இடம் பெயர்ந்து விட்டன.
இங்கு மூலப்பொருள் வங்கி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை நிறுவினால் தொழில் வளர்ச்சி பெறும். வேறு இடங்களுக்கு வர்த்தகம் கை மாறுகிறது. மின் கட்டண உயர்வால் தொழில் முடங்குகிறது.
சோலார் பேனல் நிறுவ தமிழக அரசு, 50 சதவீதம் மானியம் வழங்கினால், மின் பயன்பாடு குறையும். கட்டுமான தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண, தர மேம்பாட்டு பயிற்சி பட்டறை துவங்க உதவ வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததும், பாண்டியாறு-புன்னம்புழா, ஆனைமலை-நல்லாறு திட்டங்கள் நிறைவேற்றப்படும். கோவை மாவட்டத்தில் தொழில், விவசாயம் சிறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி உறுதியளித்தார்.
அவர் மேலும் பேசுகையில், ''ராணுவத்துக்கான உதிரி பாக தொழிற்சாலையை கோவையில் அமைக்க, மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்; அவர்களும் சம்மதித்துள்ளனர். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் சிறக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். விசைத்தறி தொழில் சரியாமல் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் அம்மன் அர்ஜூனன், அருண்குமார், ஜெயராம், கந்தசாமி, செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.