/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'கோவை மாவட்டத்தை தி.மு.க., புறக்கணிக்கிறது''கோவை மாவட்டத்தை தி.மு.க., புறக்கணிக்கிறது'
'கோவை மாவட்டத்தை தி.மு.க., புறக்கணிக்கிறது'
'கோவை மாவட்டத்தை தி.மு.க., புறக்கணிக்கிறது'
'கோவை மாவட்டத்தை தி.மு.க., புறக்கணிக்கிறது'
ADDED : ஜன 29, 2024 12:41 AM
கோவை;கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி சார்பில், செல்வபுரத்தில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாணவரணி மாவட்ட செயலாளர் ஜேம்ஸ்ராஜா தலைமை வகித்தார்.
அதில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:
பொய் வாக்குறுதிகளை கூறி, ஆட்சிக்கு வந்த தி.மு.க, மூன்றாண்டுகளில் ஏதாவது திட்டம் தந்ததா? தி.மு.க., எம்.பி.,க்கள், 38 பேரும் பாராளுமன்றத்தில் சீட்டை தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது என அறிவித்ததுமே, ஸ்டாலினுக்கு ஜுரம் வந்து விட்டது.
காவல்துறை தி.மு.க.,வின் அடிமையாக உள்ளது. அப்பாவிகள் மீதும், அ.தி.மு.க.,வினர் மீதும் மட்டுமே வழக்கு போடுகிறார்கள்.
தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனரை, எம்.எல்.ஏ., செல்வராஜ் சந்தித்து பேசியிருக்கிறார். கமிஷனருடன் சண்டை போட்டதுதி.மு.க.,வினர். ஆனால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிந்திருக்கின்றனர்.
மக்கள் பணிக்காக, கமிஷனரை சந்திக்க எம்.எல்.ஏ.,வுக்கு உரிமை இருக்கிறது. மக்கள் பிரச்னைகளை கூறினால் வழக்கு என்றால், தமிழகத்தில் என்ன ஆட்சி நடக்கிறது.
இதற்கெல்லாம் விரைவில் முடிவு வரும். கோவை மாவட்டத்தை தி.மு.க., அரசு புறக்கணிக்கிறது. லோக்சபா தேர்தல் வரப்போகிறது; 40 தொகுதியிலும் வெல்வோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் கந்தசாமி, மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாசலம்,புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் சந்திரசேகர், குனியமுத்துார் பகுதி கழக செயலாளர் மதனகோபால் உட்பட பலர் பேசினர்.