/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு 'மயக்க' டாக்டர் தேவை! போதிய எண்ணிக்கையில் நியமிக்க எதிர்பார்ப்பு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு 'மயக்க' டாக்டர் தேவை! போதிய எண்ணிக்கையில் நியமிக்க எதிர்பார்ப்பு
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு 'மயக்க' டாக்டர் தேவை! போதிய எண்ணிக்கையில் நியமிக்க எதிர்பார்ப்பு
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு 'மயக்க' டாக்டர் தேவை! போதிய எண்ணிக்கையில் நியமிக்க எதிர்பார்ப்பு
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு 'மயக்க' டாக்டர் தேவை! போதிய எண்ணிக்கையில் நியமிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 25, 2025 09:38 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், அதிகப்படியான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஐந்து மயக்கவியல் நிபுணர்களுக்கு, மூன்று பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சேவைகளில் பாதிப்பு ஏற்படுகிறது.
பொள்ளாச்சி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், தினமும், 1,500க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளிகளுக்காக, 462 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, பிரசவம், எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, முதுகுத்தண்டு என பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக, மூன்று ஆப்ரேஷன் தியேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, உதவியாளர்கள் மூன்று ஷிப்ட்களில் பணியாற்றுகின்றனர். ஆனால், ஒரு ஆப்ரேஷன் தியேட்டருக்கு, தலா இருவர் வீதம் 6 உதவியாளர்கள் இருக்க வேண்டும். தற்போது, 4 உதவியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
இதுஒருபுறமிருக்க, ஐந்து மயக்கவியல் நிபுணர்களுக்கு, மூன்று பேர் மட்டுமே பணியில் உள்ளனர். நாள் ஒன்றுக்கு, சராசரியாக, 8 முதல் 9 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதால், மயக்கவியல் நிபுணர்கள், மன அழுத்தம், உடல் சோர்வை எதிர்கொள்கின்றனர்.
மேலும், சுழற்சிமுறையில், ஒருவர், 24 மணி நேரம் பணியில் இருக்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு 'போஸ்ட் டியூட்டி ஆப்' எடுப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எந்த நேரத்திலும் மருத்துவ சேவைக்கு அழைக்கப்படலாம் என்பதால், விடுப்பை தவிர்க்கும் நிலையும் ஏற்படுகிறது. மாறாக, ஞாயிறுக்கிழமை, அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளாத போது மட்டுமே மயக்கவியல் நிபுணர்கள் ஓய்வு எடுக்கின்றனர்.
மருத்துவ பணிகள் துறையினர் கூறியதாவது:
அறுவை சிகிச்சையில் மயக்கவியல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அறுவை சிகிச்சை செய்யும் நேரம், நோயாளிகளுக்கு இணை நோய்கள் உள்ளதா என்பதை கணக்கிட்டு, தேவையான அளவு மயக்க மருந்து கொடுத்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்ய இத்துறை டாக்டர்கள் உதவுவர்.
மயக்கவியல் நிபுணர்கள், மிக கவனத்துடனும், துரிதமாகவும் செயல்படுகின்றனர். அறுவை சிகிச்சைக்கு ஏற்ற சூழலை உருவாக்கி, நோயாளியின் வலி மற்றும் மயக்க நிலையை கட்டுப்படுத்துகின்றனர்.
மருத்துவமனையில் ஐந்து பேர் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு 'ஸ்டே டியூட்டி' வழங்க முடியும். அதேபோல, இரவு பணி முடிந்தவுடன் 'போஸ்ட் டியூட்டி ஆப்' வழங்க முடியும். தற்போது, மூன்று ஆப்ரேஷன் தியேட்டருக்கு தலா ஒருவர் வீதம், மூன்று பேர் மட்டுமே உள்ளனர்.
ஒருவர் சுழற்சிமுறையில், 24 மணி நேரம் பணியைத் தொடர்ந்தாலும், ஓய்வு முற்றிலும் வழங்க முடிவதில்லை. ஆனால், பிற மருத்துவமனைகளை ஒப்பிடுகையில், அதிகப்படியான அறுவை சிகிச்சைக்கள், இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, நேற்றுமுன்தினம், 14 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் காரணமாக, மாற்று பணிக்கு வரவும் பிற மருத்துவமனை மயக்கவியல் நிபுணர்கள் தயக்கம் காட்டுவதுடன், தவிர்க்கவும் செய்கின்றனர். போதிய எண்ணிக்கையில், மயக்கவியல் நிபுணர்களை நியமிக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.
மூன்று ஆப்ரேஷன் தியேட்டருக்கு தலா ஒருவர் வீதம், மூன்று பேர் மட்டுமே உள்ளனர்.
ஒருவர் சுழற்சிமுறையில், 24 மணி நேரம் பணியைத் தொடர்ந்தாலும், ஓய்வு முற்றிலும் வழங்க முடிவதில்லை.
ஆனால், பிற மருத்துவமனைகளை ஒப்பிடுகையில், அதிகப்படியான அறுவை சிகிச்சைக்கள், இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, நேற்றுமுன்தினம், 14 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.