/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ துாய்மை பணியாளர்களுக்கு 'ரெயின் கோட்' வினியோகம் துாய்மை பணியாளர்களுக்கு 'ரெயின் கோட்' வினியோகம்
துாய்மை பணியாளர்களுக்கு 'ரெயின் கோட்' வினியோகம்
துாய்மை பணியாளர்களுக்கு 'ரெயின் கோட்' வினியோகம்
துாய்மை பணியாளர்களுக்கு 'ரெயின் கோட்' வினியோகம்
ADDED : மே 27, 2025 07:56 PM
நெகமம்; நெகமம் பேரூராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு 'ரெயின் கோட்' வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் நெகமம் சுற்று பகுதிகளில், கடந்த ஒருவாரமாக மழை பெய்வதால் ஏராளமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, மழை நேரத்தில் துாய்மை பணியாளர்கள், சுய உதவி குழு பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள் என அனைவரும் மழையில் நனைந்த படி பணியாற்றும் சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், நெகமம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பணியாளர்கள் அனைவருக்கும் 'ரெயின் கோட்' வழங்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதில் பணியாளர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
மேலும், பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, பணிகள் விரைந்து நடக்கவும், பணியாளர்கள் பாதுகாப்பாக பணி மேற்கொள்ளவும் வசதியாக, 'ரெயின் கோட்' வழங்கப்பட்டுள்ளது,' என்றனர்.