/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு துவக்கப்பள்ளிக்கு கம்ப்யூட்டர் விநியோகம்அரசு துவக்கப்பள்ளிக்கு கம்ப்யூட்டர் விநியோகம்
அரசு துவக்கப்பள்ளிக்கு கம்ப்யூட்டர் விநியோகம்
அரசு துவக்கப்பள்ளிக்கு கம்ப்யூட்டர் விநியோகம்
அரசு துவக்கப்பள்ளிக்கு கம்ப்யூட்டர் விநியோகம்
ADDED : ஜன 12, 2024 10:10 PM

அன்னுார்;அன்னுார் தெற்கு துவக்கப் பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது.
அன்னுார் தெற்கு துவக்கப் பள்ளியில் 110 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு அன்னுார் டவுன் லயன்ஸ் கிளப் சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
லயன்ஸ் கிளப் கோவை மாவட்ட ஆளுநர் மோகன் குமார் தலைமை வகித்தார்.
லயன்ஸ் கிளப் சர்வதேச முன்னாள் இயக்குனர் ராமசாமி பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவியர் பயன்பாட்டுக்கு கம்ப்யூட்டரும், எழுது பொருட்களும் வழங்கப்பட்டன. இதில், லயன்ஸ் கிளப் தலைவர் விஜயகுமார், கேபினட் செயலாளர் விஸ்வநாதன், நிர்வாகி மாரிசாமி, செயலாளர் தரணிதரன் உள்பட பலர் பங்கேற்றனர். திடக்கழிவு மேலாண்மை குறித்த கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தோருக்கு பரிசு வழங்கப்பட்டது.