/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சொத்து வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்பு துண்டிப்புசொத்து வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
சொத்து வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
சொத்து வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
சொத்து வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
ADDED : ஜன 27, 2024 11:29 PM
கோவை:கோவை மாநகராட்சியில், சொத்து வரி, குடிநீர் கட்டணம் வசூலிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருப்வோரின் குடிநீர் இணைப்பை துண்டிக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டிருக்கிறார்.
வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருப்போரின் பட்டியலை, வருவாய் பிரிவினர் பொறியியல் பிரிவினரிடம் வழங்குகின்றனர். இவர்கள், சம்பந்தப்பட்ட கட்டடத்துக்கு சென்று குடிநீர் இணைப்பை துண்டிக்கின்றனர். கடந்த வாரம், 29 இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
கிழக்கு மண்டலத்தில், 60வது வார்டு காமராஜர் சாலை, 54வது வார்டு வள்ளுவர் நகர், 7வது வார்டு ஹரி கார்டன், 57வது வார்டு நெசவாளர் காலனி, 55வது வார்டு ஏரோடிரோம் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்து கட்டடங்களுக்கு சொத்து வரி செலுத்தாததால், மாநகராட்சி பொறியியல் பிரிவினர், நேற்று குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.