/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மழை பாதிப்புகளை தடுக்க பேரிடர் மீட்புக்குழு முகாம் மழை பாதிப்புகளை தடுக்க பேரிடர் மீட்புக்குழு முகாம்
மழை பாதிப்புகளை தடுக்க பேரிடர் மீட்புக்குழு முகாம்
மழை பாதிப்புகளை தடுக்க பேரிடர் மீட்புக்குழு முகாம்
மழை பாதிப்புகளை தடுக்க பேரிடர் மீட்புக்குழு முகாம்
ADDED : ஜூலை 01, 2025 09:59 PM

வால்பாறை; வால்பாறையில், மழை பாதிப்புகளை தடுக்கும் வகையில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
வால்பாறையில், தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்யும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கடந்த, 20 நாட்களுக்கு மேலாக வால்பாறையில் முகாமிட்டுள்ளனர். மழை பாதிப்புக்களை தடுக்கும் வகையில், மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணியர் குளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. தடையை மீறி சுற்றுலா பயணியர் ஆபத்தை உணராமல் ஆற்றில் குளிக்க செல்கின்றனர்.
இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடந்த மூன்று நாட்களாகசிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் குளிக்க வந்த சுற்றுலாபயணியரை தடுத்து, மழையினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனால், சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் கூறுகையில், 'ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் சிக்கியவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது, முதலுதவி அளிப்பது, மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது, திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும், சுற்றுலா பயணியர் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.