Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீடுகளில் நவராத்திரி கொலு வைத்து பிரமிக்க வைத்த 'தினமலர்' வாசகியர்

வீடுகளில் நவராத்திரி கொலு வைத்து பிரமிக்க வைத்த 'தினமலர்' வாசகியர்

வீடுகளில் நவராத்திரி கொலு வைத்து பிரமிக்க வைத்த 'தினமலர்' வாசகியர்

வீடுகளில் நவராத்திரி கொலு வைத்து பிரமிக்க வைத்த 'தினமலர்' வாசகியர்

ADDED : செப் 23, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
கோவை; நவராத்திரி விழாவை முன்னிட்டு, தினமலர் நாளிதழ் சார்பில் கொலு விசிட், பி.என்.புதுார் மற்றும் வடவள்ளி பகுதியில் நேற்று நடந்தது. 17க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தினமலர் குழுவினர் விசிட் செய்தனர்.

ஒவ்வொரு கொலுவும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி கடாட்சத்துடன் தெய்வீகமாக காட்சி அளித்தன. 100 பொம்மைகள் முதல், 300 பொம்மைகள் வரை கொலுவில் வைக்கப்பட்டிருந்தன.

* பி.என்.புதுார் கோகுலம் காலனியில் வசிக்கும், வாசகி மாலதிரேகா ராஜாராம் கூறுகையில், ''கல்யாணத்துக்கு முன் என் அம்மா, கல்யாணத்துக்கு பின் மாமியார், இப்போது நான் என, தொடர்ந்து கொலு வைத்து வழிபாடு செய்யும் பாரம்பரியம் 40 வருஷமாக தொடர்கிறது,'' என்றார்.

* பி.என்.புதுாரை சேர்ந்த வாசகி சாந்தி சங்கர் கூறும் போது, ''சிவனுக்கு ஒரு ராத்திரி என்றால், துர்க்கைக்கு ஒன்பது ராத்திரிகள். நவராத்திரி கொலு வைத்து வழிபாடு செய்தால், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள்,'' என்றார்.

* வாசகி காயத்ரி சுந்தர் கூறுகையில், ''கொலு வைத்த ஒன்பது நாட்களும் மனம் நிம்மதியாக இருக்கும். வீட்டில் தெய்வீகம் நிறைந்து இருக்கும்,'' என்றார்.

*இடையர்பாளையம் இ.பி. காலனியை சேர்ந்த வாசகி நவீனா சுந்தரி கூறும் போது, ''எங்களுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். வழிவழியாக வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் என் மகன், மருமகள் அங்கு தவறாமல் கொலு வைத்து வருகின்றனர்,'' என்றார்.

* பி.என்.புதுார் மருதம் நகரில் வசிக்கும் வாசகி ஜெயஸ்ரீ பத்மா கூறுகையில் ''நவராத்திரி கொலுவில் இருக்கும் பொம்மைகள், கனவில் வந்து கதைகள் சொல்லும்,'' என்றார்.

* வடவள்ளி பத்மா நகரை சேர்ந்த வாசகி லலிதா சந்திரசேகரன், ஏழு லோகம், ஏழு ஸ்வரங்கள், ஏழு கடல், ஏழு மலைகள் ஏழு வானவில் நிறங்கள், ஏழு வள்ளல்கள், ஏழு நாட்கள் என, ஏழு வரிசையில் கொலு வைத்து அசத்தி இருக்கிறார்.

* வடவள்ளி அபிராமி நகரை சேர்ந்தவாசகி சரஸ்வதி கூறுகையில், ''கணபதி, முருகன், சிவன், சக்தி, திருமால் வழிபாடுகளை விளக்கும் வகையில், கொலு அமைத்து இருக்கிறேன்,'' என்றார்.

இன்று ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், பேரூர் பகுதிகளில் தினமலர் குழுவினர் கொலு விசிட் வருகின்றனர். நவராத்திரி கொலு விழா கொண்டாட்டத்தை தினமலர் நாளிதழுடன் மெடிமிக்ஸ், மேளம், ரெஜூ ஆயுர், லயா காபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.

விதவிதமாக கொலு செட்!


தசாவதாரம் செட், தர்பார் செட். விநாயகர் செட், அஷ்டலட்சுமி செட், மும்மூர்த்தி செட், கிரிவலம்செட், கருடா சேவை செட், திருப்பதி செட், குபேரன்செட், துலாபாரம் செட், வைகுண்டம் செட், கண்ணன் கோபியர் செட், வளைகாப்பு செட், கல்யாண செட், கிரிக்கெட் செட், ராணுவ அணி வகுப்பு செட் என, விதமான கொலு பொம்மைகளால், அற்புதமாக அலங்காரம் செய்து அசத்தி உள்ளனர் நம் வாசகியர். சில வீடுகளில் 50 மற்றும் 80 ஆண்டுகள் பழமையான பொம்மைகளை வைத்து, ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us