/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உயர்கல்வி ஆலோசனை வழங்கும் 'தினமலர்' வழிகாட்டி இன்று நடக்கிறது உயர்கல்வி ஆலோசனை வழங்கும் 'தினமலர்' வழிகாட்டி இன்று நடக்கிறது
உயர்கல்வி ஆலோசனை வழங்கும் 'தினமலர்' வழிகாட்டி இன்று நடக்கிறது
உயர்கல்வி ஆலோசனை வழங்கும் 'தினமலர்' வழிகாட்டி இன்று நடக்கிறது
உயர்கல்வி ஆலோசனை வழங்கும் 'தினமலர்' வழிகாட்டி இன்று நடக்கிறது

கல்வியாளர்கள் யார், யார்?
நிகழ்ச்சியில், 'எதிர்காலத்தில் ஆளப்போகும் தொழில்நுட்பங்கள்' எனும் தலைப்பில், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, 'தேசிய நுழைவுத் தேர்வுகள் மற்றும் உதவித் தொகைகள்' குறித்து கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், 'நீட், ஜே.இ.இ., தேர்வுகளில் சாதிக்க டிப்ஸ்' எனும் தலைப்பில் கல்வி ஆலோசகர் அஸ்வின், '21ம் நுாற்றாண்டு திறன்கள்' குறித்து நாஸ்காம் தேசிய தலைவர் உதயகுமார், 'உடனடி வேலை வழங்கும் படிப்புகள்' குறித்து ரமேஷ் பிரபா, 'டிரோன் டெக்னாலஜி' குறித்து சென்னை எம்.ஐ.டி., பேராசிரியர் செந்தில்குமார், 'தொழில்துறை வல்லுனர் ' எனும் தலைப்பில், இ.வி.,லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் மேலாண்மையின் செந்தில்ராஜா, 'கல்விக்கடன் எளிது' எனும் தலைப்பில், வங்கியாளர் விருத்தாசலம் ஆகியோர் பேச உள்ளனர்.
இணையும் நிறுவனங்கள்
கருத்தரங்கை, 'தினமலர்'நாளிதழுடன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது. பக்கபலமாக ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா பல்கலை பங்கேற்கின்றன.