/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நுண்ணுயிர் எதிர்ப்புத்திறனுடன் டயபர், நாப்கின்! கோவை கல்லுாரியில் ஆராய்ச்சிக்கு வெற்றிநுண்ணுயிர் எதிர்ப்புத்திறனுடன் டயபர், நாப்கின்! கோவை கல்லுாரியில் ஆராய்ச்சிக்கு வெற்றி
நுண்ணுயிர் எதிர்ப்புத்திறனுடன் டயபர், நாப்கின்! கோவை கல்லுாரியில் ஆராய்ச்சிக்கு வெற்றி
நுண்ணுயிர் எதிர்ப்புத்திறனுடன் டயபர், நாப்கின்! கோவை கல்லுாரியில் ஆராய்ச்சிக்கு வெற்றி
நுண்ணுயிர் எதிர்ப்புத்திறனுடன் டயபர், நாப்கின்! கோவை கல்லுாரியில் ஆராய்ச்சிக்கு வெற்றி
ADDED : ஜன 27, 2024 11:18 PM

கோவை சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மேலாண்மை கல்லுாரியில், நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் கொண்ட, எளிதில் மட்கும் தன்மையுடைய குழந்தைகளுக்கான டயபர் மற்றும் மகளிருக்கான நாப்கின் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ், கோவை பீளமேடு பகுதியில், சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரி செயல்பட்டு வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இக்கல்லுாரியில் படித்து வருகின்றனர். இக்கல்லுாரியில், மெடிக்கல், ஆட்டோமொபைல், அக்ரி, டெக்னிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், ஜவுளி பயன்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.
ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாக, 2023 ஏப்., மாதம் மத்திய அரசின் ஜவுளித்துறையின் நிதியுதவியோடு, இயற்கை பொருட்களை கொண்டு, டயபர், நாப்கின் தயாரிக்கும் ஆராய்ச்சி துவக்கப்பட்டது.
பத்து மாத ஆராய்ச்சியில், பேராசிரியர்கள் பிரகாஷ், பிரியங்கா மற்றும் குழுவினர் பங்கேற்று வெற்றியும் கண்டுள்ளனர்.
இதுகுறித்து, கல்லுாரி இயக்குனர் அல்லிராணி கூறுகையில், ''சந்தைகளில் கிடைக்கும் டயபரில் கெமிக்கல் பொருட்கள் பயன்படுத்துவதால், தோல் சார்ந்த பாதிப்புகள் வருகின்றன.
இதற்கு தீர்வு காணும் வகையில், நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் கொண்ட நாப்கின், டயபர் உருவாக்கியுள்ளோம்.
இதில், அஸ்வகந்தா, கொட்டை கரந்தை போன்ற குறிப்பிட்ட வேறுபட்ட அளவுகளில் மூலிகைகளை எடுத்து, பொடிகளாகவும், சாறுகளாகவும் எடுத்து பயன்படுத்தியுள்ளோம்.
காட்டன், மூங்கில் உள்ளிட்ட ஐந்து இயற்கை பொருட்களில் இருந்து, நார்கள் பிரித்தெடுத்து இதனை தயாரித்துள்ளோம். உரிய தர ஆய்வு செய்து; அரசுக்கு சமர்ப்பித்துள்ளோம்,'' என்றார்.