/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தானியங்கி சொட்டுநீர் பாசனம்: வழிகாட்டுகிறது வேளாண் துறைதானியங்கி சொட்டுநீர் பாசனம்: வழிகாட்டுகிறது வேளாண் துறை
தானியங்கி சொட்டுநீர் பாசனம்: வழிகாட்டுகிறது வேளாண் துறை
தானியங்கி சொட்டுநீர் பாசனம்: வழிகாட்டுகிறது வேளாண் துறை
தானியங்கி சொட்டுநீர் பாசனம்: வழிகாட்டுகிறது வேளாண் துறை
ADDED : ஜன 28, 2024 11:23 PM
பெ.நா.பாளையம்:தானியங்கி சொட்டுநீர் பாசனம் என்பது குறித்த நேரத்தில், சென்சார், கம்ப்யூட்டர் மற்றும் பிற இயந்திரங்களோடு, குறைந்த வேலை ஆட்களின் உதவியுடன் நீர்ப்பாசனம் மேற்கொள்வது ஆகும்.
இந்த தொழில்நுட்பம், தண்ணீர் மற்றும் வேலை ஆட்கள் பற்றாக்குறை சூழலில், துல்லிய நீர் பாசனத்திற்கு உதவுகிறது. மேலும், பாசன நீர் உபயோகத்திறனையும் அதிகரிக்கிறது.
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறையினர் கூறுகையில், ''மண் ஈரப்பதம் சென்சார் வாயிலாக நிமிடத்திற்கு, நிமிடம் கண்காணிக்கப்படுகிறது. மண் ஈரப்பத சென்சார்களின் தரவுகள், மைக்ரோ கன்ட்ரோலர் அலகுக்கு செலுத்தப்பட்டு, அதில் கம்ப்யூட்டர் இயங்கும் விதம் மாற்றப்படுகிறது.
அத்தரவுகள் ப்ளூடூத் அல்லது வைபை போன்ற தொழில்நுட்ப கம்பி இல்லா கடத்தியின் உதவியுடன் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படுகிறது.
இத்தரவுகளின்படி, மண்ணின் ஈரப்பதம் குறைவான நிலையை எட்டும் போது, சொலினாய்டு வால்வு வாயிலாக, பாசன நீர் குழாய் திறக்கப்பட்டு, பயிர்களுக்கு தானாகவே நீர் பாசனம் செய்யப்படுகிறது. இப்பணிகளை வேறு இடத்திலிருந்து மொபைல் போன் வாயிலாக கண்காணிக்கும் வசதியும் உள்ளது.
சொட்டுநீர் பாசனத்தை தானியங்கியாக மாற்றுவதால், துல்லிய நீர்ப்பாசனம், மண்ணின் ஈரப்பதம் மற்றும் காலநிலையை பொறுத்து, பயிர் தேவைக்கு ஏற்ப துல்லியமாக நீர் பாசனம் செய்யப்படுகிறது. இதனால், அதிக நீர் விரயமாகுதல் தடுக்கப்படும். இடுபொருள்கள் பயன்பாட்டு திறன் அதிகரிக்கும். வேலையாட்கள் தேவை குறையும். தேவையான நீர் மற்றும் ஊட்டச்சத்து சரியான தருணத்தில் கிடைப்பதால், மகசூல் அதிகரிக்கும். குறைவான பாசன நீர் பயன்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து மேலாண்மையால் சுற்றுப்புறசூழல் பாதுகாக்கப்படுகிறது' என்றனர்.
மேலும், விபரங்களுக்கு பெரியநாயக்கன்பாளையம் வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் அணுகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.