/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/டெங்கு காய்ச்சலா... அலட்சியம் வேண்டாம்! டாக்டர் பரிந்துரைப்படி மருந்து எடுத்துக்கணும்டெங்கு காய்ச்சலா... அலட்சியம் வேண்டாம்! டாக்டர் பரிந்துரைப்படி மருந்து எடுத்துக்கணும்
டெங்கு காய்ச்சலா... அலட்சியம் வேண்டாம்! டாக்டர் பரிந்துரைப்படி மருந்து எடுத்துக்கணும்
டெங்கு காய்ச்சலா... அலட்சியம் வேண்டாம்! டாக்டர் பரிந்துரைப்படி மருந்து எடுத்துக்கணும்
டெங்கு காய்ச்சலா... அலட்சியம் வேண்டாம்! டாக்டர் பரிந்துரைப்படி மருந்து எடுத்துக்கணும்
ADDED : பிப் 06, 2024 01:42 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில், கட்டட ஒப்பந்ததாரர்களுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், ஆங்காங்கே டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, கிணத்துக்கடவு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு அமைப்புகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இதில், குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் சுகாதார துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் இணைந்து, குடியிருப்புகளில் தண்ணீர் நிறைந்த இடத்தில் ஆய்வு செய்தும், தண்ணீரை மூடி வைக்கவும், தண்ணீர் தேக்கத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், அரசு மற்றும் தனியார் கட்டட வேலை செய்யும் இடங்களில் தண்ணீர் தேக்கம் அடைவதால், டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலை உள்ளது. இதை தொடர்ந்து, ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு பரவல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ துறை இணைந்து கட்டட ஒப்பந்ததாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வடசித்துார் அரசு டாக்டர் சிவசந்திரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜவேலு, வட்டார சுகாதார ஆய்வாளர் குணசேகரன், மருத்துவம் அல்லா மேற்பார்வையாளர் கண்ணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர்பாட்சா மற்றும் கட்டட ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.
டெங்கு பரவுதல் மற்றும் தடுப்பு முறை குறித்து டாக்டர் சிவசந்திரன் கூறியதாவது:
சுத்தமான தண்ணீரில் மட்டுமே டெங்கு கொசு உற்பத்தியாகும். டெங்கு கொசு கடித்ததற்கான அறிகுறி இருக்காது. திடீரென காய்ச்சல் ஏற்படும். முதல் மூன்று நாட்களுக்கு காய்ச்சல் இருக்கும். அடுத்த இரண்டு நாட்கள் காய்ச்சல் இருக்காது. இதனை கவனக்குறைவாக எடுத்துக்கொள்ளாமல், முறையாக டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
குறைந்தது ஏழு நாட்கள் முழுமையாக ஓய்வு எடுத்து, டாக்டர் ஆலோசனை படி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு, கூறினார்.