/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காலையில் ஆர்ப்பாட்டம்; மாலையில் வாபஸ்காலையில் ஆர்ப்பாட்டம்; மாலையில் வாபஸ்
காலையில் ஆர்ப்பாட்டம்; மாலையில் வாபஸ்
காலையில் ஆர்ப்பாட்டம்; மாலையில் வாபஸ்
காலையில் ஆர்ப்பாட்டம்; மாலையில் வாபஸ்

வால்பாறை
வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்டில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.டி.பி., தொழிற்சங்க வால்பாறை கிளை தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் செந்துார்பாண்டி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
உடுமலை
உடுமலை அரசு போக்குவரத்துக்கழக பணி மனை முன், தொழிற்சங்கங்கள் சார்பில், கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட துணை பொதுச்செயலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். அண்ணா தொழிற்சங்க மண்டலத்தலைவர் ரவீந்திரன், பி.எம்.எஸ்., நாகராஜ், பகுதி செயலாளர் காளிமுத்து, தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஒத்திவைப்பு
இந்நிலையில், நேற்று மதியம், ஐகோர்ட் அறிவுறுத்தலின் பேரில், வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், ஜனவரி 19-ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.