/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 08, 2024 12:06 AM

வால்பாறை;வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தரக்கோரி, பல்வேறு கட்சிகளின் சார்பில் வால்பாறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊதிய உயர்வு, கருணை வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வரும், 9ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளன.
இந்நிலையில் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தரக்கோரி, வால்பாறை அரசு போக்குவரத்துக்கழக பணிமனையின் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க., (சி.டி.சி.,), தொழிற்சங்க மாவட்டத்தலைவர் சின்ராஜ், ஏ.டி.பி., தொழிற்சங்க மாநிலத்தலைவர் அமீது, அ.தி.மு.க., நகரச்செயலாளர் மயில்கணேஷ் மற்றும் கம்யூ., ஐ.என்.டி.யு.சி., ெஹச்.எம். எஸ்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச்சேர்ந்த மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.