/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பத்திரப்பதிவு துறைதான் லஞ்சத்தில் 'டாப்': ம.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் கடிதம்பத்திரப்பதிவு துறைதான் லஞ்சத்தில் 'டாப்': ம.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் கடிதம்
பத்திரப்பதிவு துறைதான் லஞ்சத்தில் 'டாப்': ம.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் கடிதம்
பத்திரப்பதிவு துறைதான் லஞ்சத்தில் 'டாப்': ம.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் கடிதம்
பத்திரப்பதிவு துறைதான் லஞ்சத்தில் 'டாப்': ம.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் கடிதம்
ADDED : ஜன 13, 2024 01:26 AM
கோவை;இன்றைய நிலவரப்படி பதிவுத்துறைதான் லஞ்சத்தில் முதலிடம் பிடித்துள்ளதாக, ம.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:
பதிவுத்துறையில் புதிது புதிதாக லஞ்சங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, நில வழிகாட்டி நிர்ணயம் செய்ய ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை லஞ்சம்.
அதிக மதிப்புள்ள பத்திரங்கள் பதிவு செய்தால் பத்திர மதிப்புக்கு ஏற்ப லஞ்சம். விவசாய பூமியை, 21 சென்ட்களாக பிரித்து விற்க, ஏக்கருக்கு ரூ.10 லட்சம் முதல் 15 லட்சம் வரை லஞ்சம். பதிவாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை இடமாறுதல் செய்ய இடத்தை பொறுத்து லஞ்சம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
ஒரு மாவட்டத்திற்கு பதிவுத்துறை மேலிடம், ஒரு நபரை நியமித்தும், அவரிடம் லஞ்சம் கொடுத்தால்தான், அதிகாரி உத்தரவு வழங்குவதும் உலகத்திற்கே தெரியும். இன்றைய நிலவரப்படி பதிவுத்துறைதான், லஞ்சத்தில் முதலிடம் பிடித்துள்ளது. தாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பதிவுத்துறையில் எல்லா வகையான சேவை கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டு, மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். லஞ்சம் பல மடங்கு உயர்ந்துள்ளது. பதிவுத்துறை அமைச்சர் உண்மைக்கு மாறாக அறிக்கை விடுக்கிறார்.
உண்மை தன்மையை விசாரித்து, தக்க நடவடிக்கை எடுத்தால்தான் மக்களுக்கு நன்மை கிடைக்கும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.