/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேளாண் அலுவலகத்தில் படிக்கட்டு கம்பி சேதம் வேளாண் அலுவலகத்தில் படிக்கட்டு கம்பி சேதம்
வேளாண் அலுவலகத்தில் படிக்கட்டு கம்பி சேதம்
வேளாண் அலுவலகத்தில் படிக்கட்டு கம்பி சேதம்
வேளாண் அலுவலகத்தில் படிக்கட்டு கம்பி சேதம்
ADDED : ஜூன் 15, 2025 09:59 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வேளாண் அலுவலகத்தில் முன்பக்க படிக்கட்டு தடுப்புக்கம்பி சேதமடைந்துள்ளது.
கிணத்துக்கடவு வேளாண் அலுவலகத்துக்கு நாள்தோறும் ஏராளமான விவசாயிகள், வேளாண் சார்ந்த மானிய திட்டங்கள் பெறவும், விதைகள் கொள்முதல் செய்யவும் மற்றும் பயிர் சார்ந்த ஆலோசனைகள் பெறவும் வந்து செல்கின்றனர்.
அலுவலகத்திற்குள் செல்லும் படிக்கட்டில் இரும்பு தடுப்புக்கம்பி அமைக்கப்பட்டது. கடந்த வாரம் இந்த வளாகத்திற்கு வந்த லாரி மோதியதில், தடுப்புக் கம்பி வளைந்து, படிக்கட்டில் இருந்து பெயர்ந்துள்ளது.
எனவே, விவசாயிகள் நலன் கருதி, சேதமடைந்த தடுப்பு கம்பியை விரைவில் சீரமைக்க வேண்டுமென, வலியுறுத்தி உள்ளனர்.