ADDED : மார் 25, 2025 12:32 AM
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் துடியலூர் அருகே இடிகரை ரோடு, சின்ன மேட்டுப்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் மூட்டையுடன் வந்த நபரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த சந்திரன், 29, என்பதும், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, வடமாநில தொழிலாளர்களுக்கு கிலோ, 10 முதல், 15 ரூபாய் வரை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பைக் மற்றும் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சந்திரன் சிறையில் அடைக்கப்பட்டார்.
கஞ்சாவுடன் இளைஞர் கைது
கோவில்பாளையம் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து சென்ற போது ஒருவர் ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவுடன் பிடிபட்டார். விசாரணையில், அவர் வரதையம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் குமார், 23, என தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்கு உட்பட ஏழு வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவரை போலீசார் அன்னூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.