/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாரதியார் பல்கலை மாணவர்கள் இடையே கிரிக்கெட் போட்டிபாரதியார் பல்கலை மாணவர்கள் இடையே கிரிக்கெட் போட்டி
பாரதியார் பல்கலை மாணவர்கள் இடையே கிரிக்கெட் போட்டி
பாரதியார் பல்கலை மாணவர்கள் இடையே கிரிக்கெட் போட்டி
பாரதியார் பல்கலை மாணவர்கள் இடையே கிரிக்கெட் போட்டி
ADDED : ஜன 04, 2024 12:22 AM

கோவை : பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, நேற்று துவங்கியது.
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரி மாணவர்களுக்கு, 'இன்டர் ஜோன்' கிரிக்கெட் போட்டி மலுமிச்சம்பட்டி எஸ்.என்.எம்.வி., மற்றும் சரவணம்பட்டி குமரகுரு லிபரல் கலை அறிவியல் கல்லுாரி மைதானங்களில் நடக்கிறது.
போட்டியை, எஸ்.என்.எம்.வி., கல்லுாரி முதல்வர் சுப்பிரமணி துவக்கி வைத்தார்.
இப்போட்டியில் மண்டல அளவிலான போட்டிகளில், முதல் இரண்டு இடம் பிடித்த எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் சுற்றுப்போட்டி, நாக் அவுட் முறையில் நேற்று நடந்தது.
எஸ்.என்.எம்.பி., கல்லுாரியில் நேற்று நடந்த போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில், கோபி கலை அறிவியல் கல்லுாரியை வீழ்த்தியது.
கோபி கல்லுாரியின் நவீன் 61 ரன்கள் எடுத்தார்.
ராமகிருஷ்ணா அணியின் ரிகான் அலி, மூன்று விக்கெட் வீழ்த்தினார். ராமகிருஷ்ணா அணிக் காக அணியின் கேப்டன் விஜய் அபிமன்யு (80*), கிஷோர் (49) ஆகியோர், சிறப்பாக விளையாடினர்.
குமரகுரு கல்லுாரியில் நடந்த போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்.டி.சி., கல்லுாரி அணியை வீழ்த்தியது. பி.எஸ்.ஜி., அணிக்கு ஹரிசங்கர் (48), ஹர்ஜித்சரவண குமார் (33) ஆகியோர் அசத்தலாக விளையாடினர்.
எஸ்.டி.சி., கல்லுாரியின் நவீன் குமார் (41), வேலாயுதன் (35) ஆகியோர் பொறுப்பாக விளையாடினர்.