/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாணவர்களுக்கான கிரிக்கெட்; ஜெயேந்திர சரஸ்வதி வாகை மாணவர்களுக்கான கிரிக்கெட்; ஜெயேந்திர சரஸ்வதி வாகை
மாணவர்களுக்கான கிரிக்கெட்; ஜெயேந்திர சரஸ்வதி வாகை
மாணவர்களுக்கான கிரிக்கெட்; ஜெயேந்திர சரஸ்வதி வாகை
மாணவர்களுக்கான கிரிக்கெட்; ஜெயேந்திர சரஸ்வதி வாகை
ADDED : ஜன 25, 2024 06:38 AM
கோவை : பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் இறுதிப்போட்டியில், ஆர்.கே. ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி, ஜெயேந்திர சரஸ்வதி அணி முதலிடம் பிடித்தது.
சுகுணா பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில், 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, காளப்பட்டி சுகுணா கல்லுாரி மைதானத்தில் நடந்தது. 20க்கும் மேற்பட்ட அணிகள், 'நாக் அவுட்' முறையில் போட்டியிட்டன. இதன் இறுதிப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜெயேந்திர சரஸ்வதி அணி 8 ஓவர்களில் 72 ரன்கள் எடுத்தது.
அணியின் பிரியதர்சன் 45 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் பள்ளி அணி 8 ஓவர்களில் 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில், ஜெயேந்திர சரஸ்வதி அணி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சுகுணா கல்வி குழும தலைவர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா, கல்லுாரி முதல்வர் கோவிந்தராஜலு, கல்வி ஒருங்கிணைப்பாளர் ரம்யா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.