ADDED : செப் 19, 2025 08:46 PM
கோவை; காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடி, பாதுகாப்பு கேட்டு, கோவை எஸ்.பி.யிடம் மனு கொடுத்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சேதுபதி,25, பவிப்பிரியா,22 ஆகியோர், 5ம் தேதி காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை முறைப்படி பதிவு செய்தனர். திருமணத்துக்கு பவிப்பிரியா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் பாதுகாப்பு கோரி, கோவை எஸ்.பி. அலுவலகத்துக்கு வக்கீலுடன் சென்று மனு கொடுத்தனர். ஆணவக்கொலை செய்து விடுவதாக, பெண்ணின் பெற்றோர் மிரட்டியதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, விசாரணை நடத்த, பொள்ளாச்சி போலீசாருக்கு, எஸ்.பி.கார்த்திகேயன் பரிந்துரைத்தார்.