ADDED : மே 21, 2025 11:50 PM
அன்னுார்; அன்னுாரில் நேற்று நடந்த ஏலத்தில், 115 கிலோ தேங்காய் விற்பனைக்கு வந்தது.
அதிகபட்சம் ஒரு கிலோ, 52 ரூபாய் 50 காசுக்கும், குறைந்தபட்சம் 47 ரூபாய்க்கும் விற்பனையானது. தேங்காய் கொப்பரை 596 கிலோ விற்பனைக்கு வந்தது. குறைந்தபட்சம் 151 ரூபாய் 59 காசுக்கும், அதிக பட்சமாக 190 ரூபாய் 16 காசுக்கும் விற்பனையானது. தேங்காய் கொப்பரைக்கு அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.