ADDED : ஜன 06, 2024 01:34 AM

நம்ம வீட்டு குட்டீஸ்களுக்கு போட்டியாக செல்ல பிராணிகளுக்கும் 'பெட் மார்க்கெட்'டில், பல அயிட்டங்கள் உள்ளன. இதை பற்றி விளக்குகிறார், கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோட்டில் உள்ள லவ்லி பெட் ஷாப் உரிமையாளர் ராஜ்குமார்:
கார்ட்டூன்களில் 'டாம் அண்ட் ஜெர்ரி' மிகப்பிரபலம். அதேபோல், பூனைகளுக்கு விளையாட பேட்டரியால் இயங்கக்கூடிய மவுஸ் வந்துள்ளது. இது இயங்கும் போது பூனை அதைத் துரத்தி விளையாடும். பூனை அதை தாக்கினாலும் உடையாத அளவுக்கு கடினமாக இருக்கும். அதேபோல, பூனைகளுக்கு 'பட்டர் பிளை' விளையாட்டு உபகரணம் விருப்பமான ஒன்றாக உள்ளது.
நாய்களுக்கு பிரத்யேகமாக 'கூலிங் பவுல்' வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்ந்த நீரை ஊற்றும்போது அது அப்படியே குளிர்ந்த நிலையில் நீண்ட நேரம் வரை இருக்கும்.
பிறந்த உடன் தாயை இழக்கும் நாய்க்குட்டிகளுக்கும், குறைந்தளவு தாய்ப்பால் சுரக்கும் நாய்களின் குட்டிகளுக்கும் போதிய ஊட்டச்சத்து கிடைக்காது.
அதற்காகவே, 'மதர் மில்க்' எனும் பவுடர் வந்துள்ளது. இதுதவிர, ஜெர்மனி (மெராடாக்), அமெரிக்கா(பெட் ஸ்டார்ட்), தாய்லாந்து (பியூரினா) ஆகிய உணவுகளும் நிறைய ஊட்டச்சத்து தருகின்றன.