/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கேரள வாடல் நோயை கட்டுப்படுத்துங்க! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்கேரள வாடல் நோயை கட்டுப்படுத்துங்க! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கேரள வாடல் நோயை கட்டுப்படுத்துங்க! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கேரள வாடல் நோயை கட்டுப்படுத்துங்க! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கேரள வாடல் நோயை கட்டுப்படுத்துங்க! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 08, 2024 01:15 AM
பொள்ளாச்சி:'தென்னை மரங்களை தாக்கும் கேரளா வாடல் நோய் தாக்குதல் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகளிடம், கற்பக விருட்சம் தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கற்பக விருட்சம் தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவன தலைவர் பகவதி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில், கேரளா வாடல் நோயால் கடந்த, 15 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் குழுவினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கற்பக விருட்சம் தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவன தலைவர் கூறியதாவது:
கேரளா வாடல் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மரங்களுக்கு, உரம் மற்றும் மருந்துகளை உடனடியாக தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் வழங்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி உள்ள, கொச்சி தென்னை ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்யும் கற்பக விருட்ச தென்னை மரங்களை, அதிகப்படியாக உற்பத்தி செய்து, தமிழகத்தில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
ஏற்கனவே, வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அகற்றிவிட்டு, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் பண்ணையில் இருந்து பெறப்பட்டு, நடவு செய்த மரங்களுக்கும், காய்க்கும் பருவத்தில் வாடல் நோய் தாக்கி உள்ளதால், மத்திய, மாநில அரசுகள் இந்நோய் மீது தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து மத்திய, மாநில வேளாண்துறை அமைச்சர்களுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், கேரளா வாடல் நோய் பாதிக்கப்பட்ட மரங்கள் குறித்து, விபரங்களை சேகரித்து மீண்டும் மனு அனுப்பப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.