/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மேயர் தலைமையில் ஒப்பந்ததாரர் கூட்டம்மேயர் தலைமையில் ஒப்பந்ததாரர் கூட்டம்
மேயர் தலைமையில் ஒப்பந்ததாரர் கூட்டம்
மேயர் தலைமையில் ஒப்பந்ததாரர் கூட்டம்
மேயர் தலைமையில் ஒப்பந்ததாரர் கூட்டம்
ADDED : ஜன 04, 2024 12:31 AM
கோவை : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, 100 வார்டுகளில், 'சிவில் ஒர்க்' செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கான கூட்டம், மேயர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. மேயர் தலைமை வகித்தார். 35க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து, மேயரிடம் கேட்டதற்கு, ''தேர்தல் நெருங்குகிறது. 'ஒர்க்' ஸ்லோவாக நடக்கிறது; அதை வேகப்படுத்துவதற்காக, ஒப்பந்ததாரர்களை அழைத்து பேசினோம். ரோடு வேலை; சிவில் வேலைகளை வேகமாக முடிக்க வேண்டும்.
வேலையை விரைந்து முடிக்கச் சொல்லி, அனைத்து மாநகராட்சிக்கும் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
இரண்டு மாதத்துக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்பதற்காக கூட்டம் நடத்தினோம். வேறெதுவும் பேசவில்லை,'' என்றார்.