/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பசுமைவழிச் சாலைக்கு கருத்து கேட்பு கூட்டம் பசுமைவழிச் சாலைக்கு கருத்து கேட்பு கூட்டம்
பசுமைவழிச் சாலைக்கு கருத்து கேட்பு கூட்டம்
பசுமைவழிச் சாலைக்கு கருத்து கேட்பு கூட்டம்
பசுமைவழிச் சாலைக்கு கருத்து கேட்பு கூட்டம்
ADDED : மே 24, 2025 11:40 PM
கோவில்பாளையம்: பசுமைவழிச் சாலை குறித்த இறுதி கட்ட கருத்து கேட்பு கூட்டம் நாளை (26ம் தேதி) அன்னூரில் நடைபெறுகிறது.
கோவை -- சத்தி தேசிய நெடுஞ்சாலையில், 1,912 கோடி ரூபாயில், குரும்பபாளையம் முதல் கர்நாடக எல்லை வரை, 96 கி.மீ.,க்குபசுமைவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 738 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த, 409 பேரிடம் கருத்து கேட்கும் கூட்டம், நான்கு கட்டங்களாக நடக்கிறது. மூன்று கட்ட கூட்டங்கள் முடிவடைந்தன.
'நான்காவது கட்ட கூட்டம், நாளை அன்னூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது. காலை 10:30 மணிக்கு கொண்டையம்பாளையம் ஊராட்சி மக்களும், மதியம் 2:30 மணிக்கு குப்பேபாளையம், காட்டம்பட்டி, கரியாம்பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த மக்களும் பங்கேற்கலாம்' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.