/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரூ. 1.34 கோடியில் தார் சாலைகள் அமைத்தல் ரூ. 1.34 கோடியில் தார் சாலைகள் அமைத்தல்
ரூ. 1.34 கோடியில் தார் சாலைகள் அமைத்தல்
ரூ. 1.34 கோடியில் தார் சாலைகள் அமைத்தல்
ரூ. 1.34 கோடியில் தார் சாலைகள் அமைத்தல்
ADDED : மே 20, 2025 11:37 PM
மேட்டுப்பாளையம்; சிறுமுகை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்றன.
இதனால் சேதமடைந்த சாலைகளுக்கு தார் போட முடியாமல் இருந்தது. பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நகரில் உள்ள சாலைகளுக்கு தார் போட, தமிழக அரசு, 1.34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மிகவும் சேதம் அடைந்துள்ள சாலைகளுக்கு, தார் போடும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
இது குறித்து சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் கூறியதாவது:
சிறுமுகை பேரூராட்சியில் சாலைகள் சீரமைக்க டெண்டர் விட்டு விரைவில் தார் சாலை அமைக்கப்படும். அதைத் தொடர்ந்து மீதமுள்ள சாலைகளுக்கும் விரைவில் தார் போடப்படும். இவ்வாறு கூறினார்.