/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ என்.எம்.எம்.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பாராட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பாராட்டு
என்.எம்.எம்.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பாராட்டு
என்.எம்.எம்.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பாராட்டு
என்.எம்.எம்.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பாராட்டு
ADDED : செப் 16, 2025 11:06 PM

கோவை; பள்ளி கல்வித்துறை மற்றும் புரோபல் இண்டஸ்ட்ரீஸ் சி.எஸ்.ஆர்., சார்பில், கடந்தாண்டு தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்ட (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். தேர்ச்சி பெற்ற 229 மாணவர்களை பாராட்டி, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
கடந்தாண்டு என்.எம்.எம்.எஸ். தேர்வில், 11 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற வெள்ளியங்காடு பள்ளி, ரூ.30,000 ரொக்கம் பரிசாக பெற்றது. சி.இ.ஓ., பாலமுரளி மற்றும் புரோபல் இண்டஸ்ட்ரீஸ் சி.எஸ்.ஆர்., இயக்குனர் வித்யா பரிசு வழங்கினர்.
'2026ம் ஆண்டில் என்.எம்.எம்.எஸ். தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் பள்ளிக்கு ரூ.50,000 ரொக்கம் பரிசு மற்றும் சிறந்த கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படும்; மேலும் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர்' என, சி.எஸ்.ஆர்., இயக்குனர் வித்யா அறிவித்தார்.