/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தமிழக அரசுக்கு நிதி வழங்க நிபந்தனை அவசியம்; பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தல்தமிழக அரசுக்கு நிதி வழங்க நிபந்தனை அவசியம்; பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தல்
தமிழக அரசுக்கு நிதி வழங்க நிபந்தனை அவசியம்; பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தல்
தமிழக அரசுக்கு நிதி வழங்க நிபந்தனை அவசியம்; பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தல்
தமிழக அரசுக்கு நிதி வழங்க நிபந்தனை அவசியம்; பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 04, 2025 09:26 AM
கோவை; 'சம்கர சிக் ஷா' திட்டத்தில், மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெறும் நிதியை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில், மாணவர்களின் கணினித் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஹை டெக் லேப்) செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு தேவையான இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி (ஐ.சி.டி.,) நிதி, 'சம்கர சிக் ஷா' திட்டத்தில் மத்திய அரசு வழங்குகிறது.
இத்திட்டத்தில், தமிழகத்துக்கு வழங்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டுமெனில், சில கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.
சங்க பொதுச்செயலாளர் குமரேசன் கூறியதாவது:
கணினி அறிவியல் பாடம் இன்னும் தனிப்பாடமாகவும், தனி பாடப்புத்தகமாகவும் அரசு பள்ளிகளில் அறிமுகமாகவில்லை. ஐ.சி.டி., ஆய்வகங்களுக்கு தேவையான பயிற்றுனர்கள் நியமிக்கப்படவில்லை. மத்திய அரசிடம் பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறி, தமிழக அரசு நிதியை பெற்று வருகிறது. ஐ.சி.டி., ஆய்வகங்களில் உள்ள, 14 ஆயிரத்து, 400 பணியிடங்களில், கணினி பயிற்றுனர்களாக நியமிக்க வேண்டிய இடங்களை, எமிஸ் ஆபரேட்டர்களாக மாற்றி, நியமனம் செய்துள்ளனர். பயிற்றுனர்களுக்கான ஊதியம் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் வழங்க வேண்டும்.
மாநில அரசின் பங்களிப்பு முறையாக வழங்கப்படுவதில்லை. எனவே, தகுதி வாய்ந்த பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்த பிறகே, மத்திய அரசு நிதியை விடுவிக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே நிதி முறையாகப் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.