/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ லோக் அதாலத்தில் ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கல் லோக் அதாலத்தில் ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கல்
லோக் அதாலத்தில் ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கல்
லோக் அதாலத்தில் ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கல்
லோக் அதாலத்தில் ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கல்
ADDED : ஜூன் 15, 2025 10:12 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் லோக் அதாலத்தில் விபத்தில் காயமடைந்த நபருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் தேசிய லோக் அதாலத் விசாரணை, கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, உள்ளிட்ட பல்வேறு நீதிமன்ற வளாகங்களில் நடைபெற்றது.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசம் செய்யக் கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம் சிவில் வழக்குகள், குடும்ப நலன் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில், விபத்தில் காயமடைந்த நபருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவை சார்பு நீதிபதி பழனிவேல், மாவட்ட உரிமையியல் நீதிபதி சன்மதி, குற்றவியல் நடுவர் நீதிபதி விக்னேஷ், உள்ளிட்டோர் வழங்கினர். இதில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜேஷ் குமார், பிரபாகரன் ஆகியோர் ஆஜராகினர்.----
அன்னூர்
அன்னூரில் நடந்த லோக் அதாலத்தில் சிறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
இலவச சட்டப் பணிகள் ஆணையம் சார்பில், அன்னூரில் உள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில்தேசிய லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. இதில் காசோலை மோசடி, சிறு கடன், குடும்ப விவகாரம் உள்ளிட்ட சிறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
சமரசம் ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிபதி மோனிகா, இரு தரப்பு புகாரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.