/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரூ.80 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் துவக்கம்ரூ.80 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் துவக்கம்
ரூ.80 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் துவக்கம்
ரூ.80 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் துவக்கம்
ரூ.80 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் துவக்கம்
ADDED : ஜன 30, 2024 10:26 PM
மேட்டுப்பாளையம்;காரமடை ஊராட்சி ஒன்றியம், பெள்ளேபாளையம் ஊராட்சி பகுதியில், 80.85 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளின், துவக்க விழா சிறுமுகையில் நடந்தது.
விழாவுக்கு பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமை வகித்து, வரவேற்றார். ஊராட்சியில், 80.85 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு, அடிக்கல் மற்றும் பூமி பூஜையில் நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா பங்கேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட செயலாளர் ரவி, முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார், ஆனந்தன் ஆகியோர் பேசினர். செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், சிறுமுகை பேரூராட்சி நகர செயலாளர் உதயகுமார் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.
ஊராட்சி துணைத் தலைவர் சுரேந்திரன் நன்றி கூறினார்.