/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாலைகளை விரைவாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு சாலைகளை விரைவாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
சாலைகளை விரைவாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
சாலைகளை விரைவாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
சாலைகளை விரைவாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 09, 2025 10:38 PM
கோவை; கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது தொடர்பான ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக, சேதமடைந்த சாலைகளில் பணிகள் முடிவுற்ற சாலைகளை சீரமைக்கும் பணி நடந்து வருவதாக, அதிகாரிகள் கூறினர்.
அதில், 74வது வார்டு சுண்டப்பாளையம் சாலை, கிருஷ்ணம்பதி குளக்கரை சாலை, 34வது வார்டு கவுண்டம்பாளையம் -- இடையர்பாளையம் சாலை, 16வது வார்டு ஜி.என்.மில்ஸ் சாலை, கே.என்.ஜி. புதுார் சாலை, 13வது வார்டு கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி சாலை, கணபதி -மணியகாரன்பாளையம் - -உடையாம்பாளையம் சாலை, 16வது வார்டு மேட்டுப்பாளையம் சாலை- - நல்லாம்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில், சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். பணிகளை விரைந்து முடிக்க, கலெக்டர் அறிவுறுத்தினார்.
மாநகராட்சி நகர பொறியாளர் விஜயகுமார், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனபால், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் முத்துச்சாமி, நெடுஞ்சாலைத்துறையினர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.