Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'புகையில்லா போகி' பண்டிகை கொண்டாட கலெக்டர் அறிவுரை

'புகையில்லா போகி' பண்டிகை கொண்டாட கலெக்டர் அறிவுரை

'புகையில்லா போகி' பண்டிகை கொண்டாட கலெக்டர் அறிவுரை

'புகையில்லா போகி' பண்டிகை கொண்டாட கலெக்டர் அறிவுரை

ADDED : ஜன 13, 2024 01:51 AM


Google News
கோவை:கோவை மாவட்டத்தில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நமது முன்னோர் பொங்கல் திருநாளுக்கு முன், வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தற்போது பழைய பொருட்களாக, பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்களை எரிப்பதால், காற்று மாசு ஏற்படுகிறது.

அதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதோடு, விபத்துகளும் ஏற்பட காரணமாகிறது. விமானம் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, போகி பண்டிகையின் போது, பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us