/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தென் மாநில சைக்கிளிங் போட்டியில் கோவை வீராங்கனைகள் ஆதிக்கம்தென் மாநில சைக்கிளிங் போட்டியில் கோவை வீராங்கனைகள் ஆதிக்கம்
தென் மாநில சைக்கிளிங் போட்டியில் கோவை வீராங்கனைகள் ஆதிக்கம்
தென் மாநில சைக்கிளிங் போட்டியில் கோவை வீராங்கனைகள் ஆதிக்கம்
தென் மாநில சைக்கிளிங் போட்டியில் கோவை வீராங்கனைகள் ஆதிக்கம்
ADDED : பிப் 06, 2024 12:24 AM
கோவை;தென்மாநில அளவிலான கேலோ இந்தியா பெண்கள் சைக்களிங் லீக் போட்டியில், கோவை வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர்.
மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், பெண்களுக்கு அஸ்மிதா லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் படி, பெண்களுக்கான தென் மண்டல ரோடு சைக்கிளிங் போட்டி, அரசூர் கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது.
சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த, வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதன் சப் ஜூனியர் பிரிவில், கர்நாடகா வீராங்கனை தீபிகா தங்கம் வென்றார். தமிழக வீராங்கனைகள் நிறைமதி (துாத்துக்குடி), தபிதா (கோவை) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.
ஜூனியர் பிரிவில் கோவை வீராங்கனைகள் தமிழரசி தங்கம், சாதனாஸ்ரீ வெள்ளி மற்றும் தன்யா வெண்கலம் வென்றனர்.
சீனியர் பிரிவில், கர்நாடகாவை சேர்ந்த அங்கிதா தங்கம், தமிழக வீராங்கனை நந்தினி வெள்ளி மற்றும் தமிழகத்தை சேர்ந்த பிந்தியா வெண்கலம் வென்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள், தேசிய அளவில் நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி, சக்தி குழும தலைவர் மாணிக்கம், கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி செயலாளர் ராமசாமி, தமிழ்நாடு சைக்கிளிங் சங்க தலைவர் சுதாகர், செயலாளர் விக்னேஷ் குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.