/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'குப்பை மாநகரமாக மாறி வருகிறது கோவை மாநகர்''குப்பை மாநகரமாக மாறி வருகிறது கோவை மாநகர்'
'குப்பை மாநகரமாக மாறி வருகிறது கோவை மாநகர்'
'குப்பை மாநகரமாக மாறி வருகிறது கோவை மாநகர்'
'குப்பை மாநகரமாக மாறி வருகிறது கோவை மாநகர்'
ADDED : ஜன 29, 2024 12:57 AM

கோவை:''கோவை நகர் குப்பை நகராக மாறிவருகிறது,'' என்று, பா.ஜ.,எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை செட்டி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை, மக்களுக்கு அர்ப்பணித்த வானதி சீனிவாசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை தெற்கு தொகுதி குறிஞ்சி கார்டன் பகுதி மக்கள், சாலை வசதி இன்றி சிரமத்திற்குள்ளாகி வந்தனர். எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் குப்பை சரியாக அகற்றாதது, மிகப்பெரும் குறையாக உள்ளது. கோவை மாநகரம் தூய்மையான நகர பட்டியலில் இருந்தது. தற்பொழுது குப்பை நகராக மாறிக்கொண்டுள்ளது.
கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது. மாநகராட்சி மேயர், தூய்மையான நகராக கோவையை மாற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக முதலீடுகளை ஈர்க்கும் இடமாக கோவை மாறிவருகிறது. ஆகவே, உடனடியாக மாநகராட்சி நிர்வாகம், குப்பையை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஸ்ரீராமர் பிராண பிரதிஷ்டைக்குப் பின், அயோத்திக்கு செல்ல பல்லாயிரக்கணக்கான மக்கள் கேட்டுக் கொண்டுள்ளதால், இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
அயோத்தி செல்லும் பக்தர்கள், சிறப்பான தரிசனம் மேற்கொள்ள அனைத்து வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது.
இவ்வாறு, வானதிசீனிவாசன் கூறினார்.