Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'ஏ.ஐ. தொழில்நுட்ப நகராக உருவெடுக்கிறது கோவை'

'ஏ.ஐ. தொழில்நுட்ப நகராக உருவெடுக்கிறது கோவை'

'ஏ.ஐ. தொழில்நுட்ப நகராக உருவெடுக்கிறது கோவை'

'ஏ.ஐ. தொழில்நுட்ப நகராக உருவெடுக்கிறது கோவை'

ADDED : செப் 10, 2025 12:30 AM


Google News
கோவை: கோவையில் நடந்த, 'இந்தியா டுடே' தென்னிந்திய மாநாட்டில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:

தமிழகம், டிஜிட்டல் நிர்வாகம், திறன் மேம்பாடு, எதிர்காலத்துக்கான கல்வியை நோக்கி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பமும், தானியங்கி இயந்திரமயமாக்கலும் தொழில்துறையை, மறு கட்டமைப்பு செய்து வருகின்றன.

வேலைவாய்ப்புக்காக திறன் மேம்பாடு, ஏ.ஐ., தொழில்நுட்ப அறிமுகம் அவசியம். நிர்வாகத்தில் டிஜிட்டல்மயமாக்கல் நடந்து வருகிறது. இ-சேவை மையங்கள் 9,000ல் இருந்து, 30 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுஉள்ளன.

தமிழகத்தில் 380 திட்டங்கள், தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, அதில் 'ஓவர்லேப்பிங்' திட்டங்களை அகற்றி, சரியான பயனாளிகளுக்கு அதிக அளவில் பயன் கிடைக்கச் செய்யும் நடவடிக்கைகளை, அரசு மேற்கொண்டு வருகிறது.

கோவை, தொழில்நுட்பம், புத்தாக்கத்துக்கான மிகச்சிறந்த இடம். நுாற்றாண்டுகளாக, தொழில்துறையின் முன்னோடி நகரம்.

தற்போது, ஏ.ஐ., மற்றும் தொழில்நுட்ப 'ஸ்டார்ட் அப்'களின் கேந்திரமாக உருவெடுத்து வருகிறது.

இவ்வாறு, அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us