/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை பஜார் கண்காட்சி; கொடிசியாவில் உற்சாகம் கோவை பஜார் கண்காட்சி; கொடிசியாவில் உற்சாகம்
கோவை பஜார் கண்காட்சி; கொடிசியாவில் உற்சாகம்
கோவை பஜார் கண்காட்சி; கொடிசியாவில் உற்சாகம்
கோவை பஜார் கண்காட்சி; கொடிசியாவில் உற்சாகம்
ADDED : ஜூன் 13, 2025 11:12 PM

கோவை; பாயன்ட் மீடியா நிறுவனத்தின் 53வது கண்காட்சியான, 'கோவை பஜார்' வீட்டு உபயோகப்பொருட்கள் கண்காட்சி, கொடிசியாவில் நேற்று துவங்கியது.
திருவாரூர் மத்திய பல்கலை இணைந்து வழங்கும் இக்கண்காட்சியில், 'வணக்கம் கோவை' எனும் கோவையின் வரலாற்று புகைப்படக் கண்காட்சி, பழங்கால நாணயங்கள், தபால் தலைகள் கண்காட்சியும் நடக்கிறது.
அரோமா நிறுவனர் பொன்னுசாமி, பேராசிரியர் இளங்கோவன் ஆகியோர் கண்காட்சியை திறந்து வைத்தனர். கண்காட்சியில், 120க்கும் மேற்பட்ட ஸ்டால்களில், வீட்டு உபயோக பொருட்கள், கார்மென்ட்ஸ், பேஷன் பொருட்கள், நகைகள் இடம் பெற்றுள்ளன.
கொடிசியா வளாகம் ஹால் 'ஏ' வில் நடைபெறும் கண்காட்சியை இன்றும், நாளையும் காலை, 10:30 முதல் இரவு, 7:00 மணி வரை பார்வையிடலாம்.